செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home வளர்தமிழ் இயக்கம்

வளர்தமிழ் இயக்கம்

15-10-2013

வளர்தமிழ் இயக்கம்

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியின் 60ஆவது மணிவிழாவினை ஒட்டி வளர்தமிழ் இயக்கம் உருவக்கப்பட்டது. இதே சமயம் வளர்தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ் பயிற்றுமொழி மாநாடு திருவள்ளுவராண்டு 2044 ஆவணித்திங்கள் 19ஆம் நாள் முதல் 23 ஆம் நாள் முடிய (4-9-2013 முதல் 8-9-2013 முடிய) புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை முடிய ஐந்து நாள்கள்,  1953ம் ஆண்டு தொடங்கப் பெற்ற சீர்மிகு தனிப்பெரும் தமிழ்க்கல்லூரியின் மணிவிழா, மணிவிழா நினைவாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழ்க் கலையரங்கத் திறப்பு விழா, எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாம் தமிழ்  எனும்  தமிழக அரசின் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்ச்சான்றோர் கருத்தரங்கும் ஆகிய முப்பெரும்விழாவும், பேரூராதீனத் தமிழ்க்கல்லூரியின் வளர்தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ்ப் பயிற்றுமொழி – வழிபாட்டு மொழி மாநில  மாநாடும் பேரூர்த் தமிழ்க் கல்லூரியிலும், கோவை மாநகரில் நடைபெற்றன.

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைக்குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் தலைமையேற்கிறார். தமிழ்வழியில் கற்றவரும் தரணி போற்றும் அறிவியலறிஞரும் மேனாள் குடியரசுத் தலைவருமான மேதகு அ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் மாநாட்டினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை வழங்கினார். DSC_8384மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத் தலைவர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், வணக்கத்திற்குரிய கோவை மாநகரத் தந்தை மேலும் தமிழ்ச் சான்றோர், சமய, மொழி, இலக்கிய அமைப்பினரும் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் கலந்து சிறப்பித்தனர்.

——————————————————————————————————————-