பேரூராதீனம்

எண் கடன் பணி செய்து கிடப்பதே

வணக்கம்

விநாயகர் துதி

இன்பம் ஆயது அறாதுஇடை ஓங்கவும்
துன்பம் ஆயது தூரத்துள் நீங்கவும்
முன்ப ராபரன் மொய்குழ லோடுஅணைந்து
அன்பின் ஈன்றஓர் ஆனையைப் போற்றுவாம்.
-சாந்தலிங்கர்

மனம் விரும்பியபடி நன்மைகள் மேலும் மேலும் உண்டாகவும், தன்னாலும் பிற உயிர்களாலும் தெய்வத்தாலும் வரும் மூன்று வகையான துன்பங்களும் அணுகாமலும், தூரத்தில் நீங்குமாறு ஆதியில் பரமசிவன் பராசக்தியோடு கூடி அன்புடன் பெற்று அருளிய ஒப்பில்லாத விநாயகப் பெருமானை வணங்குவோம்.


'துன்பம் தூரத்துள் நீங்க’ என்றது, தம்முடைய மனம் மொழி மெய்களுக்கு எட்டாது அப்பால் நீங்க என்று கூறினார்..

இன்பமாயது ஓங்கவும் துன்பமாயது நீங்கவும் என்றது, பேரின்பப் பேறும் அறியாமை இழப்பும் என்றது.

செய்திகள் & நிகழ்ச்சிகள்

மாதப்

பதிப்புகள்

பதிவிறக்கம்